முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் வட்டம், பொம்மையாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -  விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், பொம்;மையாபுரம் கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் .அ.சிவஞானம் நடைபெற்றது.
 இம்முகாமில், 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவினையும், 4 பயனாளிக்கு நத்தம் தூயசிட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் கீழ் தேசிய நீட்டித்த நிலையான வேளாண் இயக்கத்தின் மூலம் 2 பயனாளிக்கு இடுபொருட்கள்(பாராம்பரிய அங்கக பயிர் பாதுகாப்பு மருந்துகள் தயாரிப்பதற்கு), முதியோர் உதவி தொகை 9 பயானிகளுக்கும் ஆக மொத்தம் 64 பயானாளிகளுக்கு ரூ.5,72,500 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொம்;மையாபுரம் கிராமத்தில் உள்ள பயானாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்    வழங்கி பேசும் போது   தெரிவித்ததாவது :-
 அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
 இம்முகாமினை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிராமங்களில் முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.

மேலும், இம்முகாம்களில் வருவாய்த்துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை போன்ற பிற அரசுத்துறைகள் மூலமும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, கிராமத்தில் உள்ள இ-பொது சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில்  உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட மனுக்கள் பதிவு செய்யும் பிரிவிலும் தங்கள் மனுக்கள் தகுதியானதா என தெளிவாக தெரிந்து கொண்ட பின் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
 மேலும் சீமை கருவேல மரங்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். ஆகையால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் பட்டாநிலங்களில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
 தற்போது வறட்சி பாதித்த விவசாயிகளின் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களின் அடங்கல் விவரங்களை முறையாக பதிவுசெய்ய வேண்டும் என்றும், பதிவு செய்தவர்களுக்கு வறட்சி நிவாராண தொகை அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும். தட்டம்மை, ரூபல்லா நோய்களின் தீமைகளை பற்றி விரிவாக பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தட்டம்மை- ரூபெல்லா ஆகிய நோய்களுக்கான போடப்படும் தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், தட்டம்மை- ரூபெல்லா ஆகிய நோய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம்  06.02.2017 முதல் 28.02.2017  வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது.                எனவே பெற்றோர்கள் தங்களின்  9 மாதம் நிறைவுற்ற குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட  அனைத்து  சிறுவர் சிறுமியர்களுக்கும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பூசிகளை தவறாமல் போடவேண்டும் என அறிவுறுத்தினார்.
 பல்வேறு சுகாதாரமற்ற சூழ்நிலைகளினால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது. நமது சுற்றுப்புறங்களை நாம் தூய்மையாக பராமரிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொது மக்கள் காய்ச்சல் அறிகுறி தங்களுக்கு தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் மருந்துக்கடைகளில் வாங்கி உட்கொள்ளக் கூடாது, வருகின்ற பிப்ரவரி 10 அன்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் அதை தவறாமல் உட்கொள்ள வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.
 முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துக்குமரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு. சுரேஷ் , தனித்துணை ஆட்சியர் (சா.ப.தி) திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.த.டே.சத்தியராய், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கனகராஜ், வட்டாட்சியர்(விருதுநகர்) திரு.சங்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்