முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் :நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஒத்திவைப்பு தீர்மானம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக பொறுப்பேற்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கவர்னர் ஆவன செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற மக்களவையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவை, தமிழக முதல்வராக பொறுப்பேற்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கழக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கழக உறுப்பினர்கள் எழுந்து, அவையின் மையப் பகுதிக்குச் சென்று, தமிழக கவர்னர் இனியும் காலம் கடத்தாமல், தமிழக முதலமைச்சராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து, அரசியல் சாசன கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்