முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் கோட்டை மைதானத்தில் “அரசுப் பொருட்காட்சிநடைபெற்றதன் மூலம் அரசுக்கு ரூ.15,62,205- வருமானம் கிடைத்துள்ளது:கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      வேலூர்

தமிழக அரசின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2016-17 25.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்கப்பட்டு 08.02.2017 (புதன்கிழமை) வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்றது.இந்த அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுசூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆக 27 அரசு துறைகளின் திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிராம கைத்தொழில் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தாட்கோ, வேலூர் மாநகராட்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாடு நிறுவனம் போன்ற அரசு சார்பு நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டது.சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான சிறப்பு பொழுது போக்கு அம்சங்களுடன் சிற்றுண்டி வகை உணவுகளும் இப்பொருட்காட்சியில் இடம்பெற்றன. இந்த அரசு பொருட்காட்சியினை 1,11,265 பார்வையாளர்கள் கண்டு களித்து பயனடைந்துள்ளனர். மேலும் இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணம் மூலம் அரசுக்கு 25.12.2016 முதல் 08.02.2017 வரை ரூ.15 லட்சத்து 62 ஆயிரத்து 205 வருவாய் கிடைத்துள்ளது. பொதுமக்கள் இப்பொருட்காட்சியினை கண்டு களித்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து பயனடைந்தனர் எனறு கலெக்டர் சி.அ.ராமன்,  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்