முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக ஆசிரியர் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்:- கலெக்டர் வா.சம்பத், தகவல்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      சேலம்

சேலம் மாவட்டத்தில உள்ள  அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதி வாய்ந்த பழங்குடியின பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்  வரவேற்க்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்ததாவது.சேலம் மாவட்டத்தில உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதி வாய்ந்த பழங்குடியின பணி நாடுநர்களைக் கொண்டு,  தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்ய  எதிர்வரும் 11.02.2017 அன்று பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்,  ஏத்தாப்பூர் அருகில் உள்ள அபிநவம் என்ற இடத்தில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேனிலைப் பள்ளியில், தகுதி தேர்வு நடைபெற உள்ளது.  இத்தேர்வில் படிங்குயின விண்ணப்பதாரர்கள்  மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள்  மேற்கண்ட தேர்வு மையத்திற்கு 11.02.2017 அன்று காலை 8.00 மணிக்கு கீழ்கண்ட அசல் நகல் சான்றிதழ்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள்  ஆதார் அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை,  சாதிச் சான்றிதழ்     (வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்), இருப்பிடச் சான்றிதழ்,  குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின்  அதன் சான்றிதழ்,  இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவ சான்றிதழ்,  வேலை வாய்ப்பு பதிவு அட்டை, நகல் சான்றிதழ்களுடன் வருமாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்