முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெலியாங் பதவி விலக வேண்டும்: நாகாலாந்து பழங்குடியின அமைப்புகள் கெடு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

கோஹிமா  - நாகாலாந்தில் மாநில அரசுக்கு எதிராக போராடி வரும் நாகாலாந்து பழங்குடியினர் செயல்பாட்டுக் குழு மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய குழுக்கள் முதல்வர் ஜெலியாங் 3 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என கெடு விதித்துள்ளன. இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளன. முதல்வர் ஜெலியாங்குக்கு எதிராக இரு அமைப்புகளும் பதாகை பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளன. நாகா மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள 371(ஏ) பிரிவுக்கு முதல்வர் ஜெலியாங் எதிரியாக செயல்படுகிறார் என்றும் நாகா மக்களுக்கு விரோதமானவர் என்றும் அறி வித்துள்ளன.

பதாகைகள்
ஜனவரி 31-ல் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலியானதை தொடர்ந்து ரத்த கறைகள் படிந்த கைகளுக்கு முதல்வர் சொந்தகாரராகிவிட்டார் என்றும் மாநிலம் முழுவதும் பதாகைகள் அடித்து ஒட்டி வருகின்றன. இதற்கிடையே கலவரத்தை அடுத்து கொஹிமா உள்பட பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப் பட்ட தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது. முதல்வர் அமைந்திருக்கும் வீடு, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரமாக மாறியது
பிற மாநிலங்களில் உள்ளது போல நாகாலாந்திலும் மகளி ருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு முறையை கடைபிடிக்கும்படி உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை அம்மாநில அரசு ஏற்றுக் கொண் டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்