முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க புதிய சட்டம்: உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ - உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 12 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் இதனை வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஜாதி, மதத்தின் பெயரால் பதற்றத்தை ஏற்படுத்துவோ ருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் வெறுப்புணர்வு குற்றங் களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படும். காவல்துறை அத்துமீறல் வழக்குகளைக் கையாளவும் இதனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய நிவாரணத்தை உறுதி செய்யும் காவல்துறை தீர்ப்பாயம் அமைக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நிறை வேற்றப்பட்ட சட்டம் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

மாணவிகள் உயர்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு பெண் குழந்தையும் 18-வது வயதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசுத் திட்டங்கள் அமல்படுத் தப்படுவதை உறுதிசெய்ய வட்டார அளவில் உரிய அமைப்பு ஏற்படுத்தப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்கப் படும். தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்கு கள் பதிவு செய்வதற்கு உதவிட சுரக் ஷா மித்ரா என்ற அமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்