முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்,  தலைமையில் நடைபெற்றது.

           ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள்  மற்றும் ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை முற்றிலும் அகற்றிடும் பொருட்டு,ஈரோடு மாவட்டத்தில் அரசு  துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (னுளைவசiஉவ டுநஎநட ஆழnவைழசiபெ ஊழஅஅவைவநந) அமைக்கப்பட்டுள்ளதையும், மேலும் குழுவின் முழுமையான செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்தார்.

மேலும் சீமைக் கருவேல் மரங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல்  பாதிப்பு மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் ஏற்படும் அபாயம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு  மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள  அரசு துறை  அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள்  மற்றும் சேவை சங்கங்களின் மூலம்  ஒருங்கிணைந்து சீமைக் கருவேல் மரங்களை முற்றிலுமாக அழித்திட உறுதியான நடவடிக்கை  மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி  கூட்டத்தில் , மாநகராட்சி ஆணையர் சீனி அஐமல்கான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சீனிவாசன், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டாக்டர்.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ், மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்  சமூக  சேவை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago