முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி எல்க்ஹில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி எல்க்ஹில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

                                           எல்க்ஹில் முருகன் கோவில்

ஊட்டியில் தென் கைலாயம் என்றழைக்கப்படும் எல்க்ஹில் திருமான்குன்றம் மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப் பூசத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவினையொட்டி காலை 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு சென்ற பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முடித்துக்கொண்டு நேராக எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு சென்றனர். இதனால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. காலையிலிருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர். முருகப்பெருமானை தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ திருமுருக கிருத்திகை சங்கத்தினர் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

                                                 வடம் பிடித்தல்

அதன்பின் பகல் 12.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிப்பட்ட திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் டிராக்டர் வாகனத்தில் பூட்டப்பட்டு திருவீதி உலா புறப்பட்டார். திருத்தேரை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், கோவில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன்,

திருமுருக கிருத்திகை சங்க தலைவர் மோகன்ராஜ், செயலாளர் வரதராஜன்,

துணைத்தலைவர்கள் சீனிவாசன், மூர்த்தி, பொருளாளர் கோபால்ஜி,

மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.

                                             திருவீதி உலா

கோவிலிருந்து புறப்பட்ட திருத்தேர் பாம்பேகேசில், ஏ.டி.சி மார்க்கெட், மாரியம்மன்கோவில், காபிஹவுஸ் சந்திப்பு வழியாக பாம்பே கேசில் சென்று மீண்டும் இரவு திருக்கோவிலை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன்.சி.லோகநாதன், திருக்கோயில் தலைமை அர்ச்சகர் திருஞான சம்பந்தம் மற்றும் கிருத்திகை சங்கத்தினர் செய்திருந்தனர்.

                                    அனைத்து கோவில்கள்

அதேபோல் ஊட்டி ஜெயில்ஹில்லில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலிலும், லோயர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயிலிலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஊட்டி வண்டிச்சோலை லட்சுமண பெருமாள் கோவிலில் அமைந்துள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும்

அதனைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் முருகன் கோவில் மட்டுமல்லாது பிற தெய்வங்கள் உள்ள கோவில்களிலும் தைப்பூச திருவிழா அந்தந்த பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு, அனைத்து கோவில்களிலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago