முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரமபலூர் மாவட்டத்தில் சீராக குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : லெக்டர் நந்தகுமார் உத்தரவு

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

போதிய மழை இல்லாததாலும், கோடைகாலம் நெருங்கவுள்ளதாலும குடிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்களுக்கான குடிநீர்த்தேவையினை பூர்த்திசெய்யத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொருட்டு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட கிணறுகளில் உள்ள நீரின் தன்மை குறித்தும், அளவு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.நந்தகுமார். நேற்று (9.2.02017) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

 

25 கிணறுகள்

 

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 கிணறுகள் உள்ளன. அதில் ஆலம்பாடி பிரிவு சாலையில் உள்ள இரண்டு கிணறுகள், உப்போடை பகுதியில் உள்ள ஆறு கிணறுகள், கே.வி.கே.ரெடிமிக்ஸ் அருகே உள்ள கிணறு, துறைமங்கலம் ஏறி பகுதியில் உள்ள கிணறு, செங்குணம் பிரிவு சாலையில் உள்ள இரண்டு கிணறுகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது கிணற்றில் உள்ள நீரின் அளவு குறித்தும், தன்மை குறித்தும் சம்மந்தப்பட் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கோடைகாலம் நெருங்கவுள்ளதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் குறைபாடு உள்ள பகுதிகளுக்கு அதிக அளவில் நீர் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கவும், காவிரி நீரை முறையாக சுழற்சி முறையில் வழங்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

 

சிக்கனம்

 

மேலும், இனிவரும் காலங்களில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்றும், குடிநீர் விநியோகம் செய்யும் போது சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் போதி விழிப்புணர்வினை வழங்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி, உதவிப்பொறியாளர் ஆர்.மனோகரன், ஓவர்சியர்கள் ராஜா, குமரன், பணிஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்