முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் : கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி கண்காட்சி கருத்தரங்கம் மற்றும் பான் செக்கர்ஸ் போட்டி தேர்வுகள் பயிற்சி மையத்தினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (09.02.2016) தொடங்கி வைத்தார்.

 

புலமை தேவை

 

பயிற்சி மையத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது, போட்டித் தேர்வுகளுக்கு நாம் எவ்வாறு தேர்வாக வேண்டும் என்பது ஆங்கில புலமை தேவை என்ற மனப்பான்மை மிக அதிகமாக உள்ளது. நம்முடைய தாய் மொழியிலேயே போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு நாம் வெற்றி பெறலாம். போட்டி தேர்வுகளில் 1000இடங்களுக்கு 4 இலட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பிப்பார்கள். அதில் நம்முடைய முதல் போட்டித் தேர்வில் கவனிக்க வேண்டியது முதல்நிலை தேர்வில் பொது அறிவு சம்பந்தமாக கேள்விகள் அதிகமாக இடம் பெறும். அதற்கு நாம் பள்ளிப் பருவத்தில் பயிற்சி அறிவியல், சமூக வரலாறு, கணக்கு போன்றவற்றை முறையாக பயின்று இருந்தாலே போதும்.

இரண்டாவது நிலையில் நேர்காணல் நடைபெறும் பொழுது நாம் பதட்டபடாமல் கேட்கும் கேள்விகளுக்கு சமோஜித புத்தியுடன் பதிலளிக்க வேண்டும். நாம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது ஏனைய போட்டித் தேர்வுகளையும் எழுத வேண்டும். அனைத்து தேர்வுகளை எழுதுவதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

 

தங்கும் வசதி

 

தமிழக அரசின் சார்பில் பிற்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின்சார்பாக போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்காக தங்கும் வசதியுடன் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. பயிற்சி மையத்திற்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றார்கள். பயிற்சி மையத்தில் இலவசமாக தங்கும் விடுதி, உணவு, நூலகம் வசதிகள் தமிழக அரசால் செய்து தரப்பட்டுள்ளது. இதே போல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் ஒரு பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இவற்றை பயன்படுத்திக் கொண்டு போட்டித் தேர்வில் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு விடா முயற்சி;, கடின உழைப்புத்திறன், தொய்வின்றி உழைக்கும் மானப்பான்மை, நிடுநிலையுடன் பார்க்கும் மன பக்குவம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, பேசினார்.

பின்னர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக மூலம் தயார் செய்யப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, வெளியிட உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.எஸ்.பிரசாந்த், பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வை.சந்திரசேகரன், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி செயலாளர் முதல்வர் முனைவர் விக்டேரியா, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி செயலாளர் முனைவர் மரியம்மாள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்