முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலுசிஸ்தானில் கடும் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண கடலோர பகுதிகளை அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பலுசிஸ்தான் மாகாணத்தின் கடற்கரை நகரான பாஸ்னி நகரில் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவில் 25.9 கி.மீ. ஆழத்தில் அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.04 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
சேதம் இல்லை
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. என்றாலும் இது தொடர்பாக நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் பல நிலநடுக்கங்களால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும் பாலானோர் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்