முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போருக்கு படைகளை தயார் நிலையில் வைத்திருங்கள் : ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ  - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றப்பிறகு, பல்வேறு நாடுகளும் மிகுந்த விழிப்புடன் உள்ளன. டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், உலகின் ஏதேனும் ஒரு நாட்டிற்கு ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வருவதாக உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாக போருக்கு தேவையான சிறப்பு போர் கப்பல்களை உருவாக்குதல் மற்றும் ராணுவப் படைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தல் என சீனா, போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் செர்ஜி ஷோய்க்கு  உத்தரவு :
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்க்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், போருக்கு விமானப்படைகள் உள்ளிட்ட அனைத்து படைகளுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, தயார் நிலையில் வைக்கும் படியும், வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், எந்நேரமும் ராணுவம் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்த அதிரடி முடிவிற்கு, நேட்டோ நாடுகளின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்