முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்,

 

தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் பூந்தோட்டம் உயர்நிலைப் பள்ளியில், சுகாதாரத்துறை சார்பாக குடற்புழு நீக்க முகாமினை கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10-ம் தேதி ஆகும். நாடு முழுவதும் இன்று 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகின்றது. இதில் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 15-ம் தேதி (புதன்கிழமை) ஆகிய தினங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் 2,916 அங்கன்வாடி மையங்களிலும் 2,959 பள்ளிகளிலும் மற்றும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 10,32,068 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படவுள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1-19 வயதுடைய குழந்தைகளில் 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 6-59 மாதம் வயதுடைய குழந்தைகளில், 10ல் 7 குழந்தைகள் (70மூ) இரத்த சோகையினால் பாதித்துள்ளனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் அதிக அளவிலான குழந்தைகள் பாதித்துள்ளனர். 15-19 வயதினரிடையே, 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் இரத்த சோகையினால் பாதித்துள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 50மூ உடல் வளர்ச்சி குன்றியும், 43மூ எடை குறைவாக உள்ளனர்.குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்டை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.திறந்த வெளியில் மலம் கழித்தல் கூடாது. கழிவறைகளை பயன்படுத்துதல் வேண்டும். காலணிகளை அணிதல் வேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். உணவுக்கு முன், கழிவறையினை பயன்படுத்திய பின் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல் வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், குடற்புழு பாதிப்பை தடுக்கலாம்.குடற்புழு நிக்கத்தினால், இரத்த சோகையை தடுக்கிறது. நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. எனவே, தவறாமல் 1-19 வயதுடைய குழந்தைகள் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) உட்கொண்டு பயனடையுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜெமினி (கள்ளக்குறிச்சி), டாக்டர்.சௌண்டம்மாள் (விழுப்புரம்), நகராட்சி ஆணையர் (பொ) திரு.ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.இராஜேந்திரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்