முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு  நேற்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் 300 காளைகளும் , 600 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் துள்ளி சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றனர். அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா, பேன், தங்க காசுகள் , கட்டில், பீரோ என 3 இலட்சம் வரையிலான பரிசுகள் வழங்கபட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 14 மாடுபிடி வீரரகளும், 41 பார்வையாளர்கள் உட்பட 52 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த  8 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.  ஜல்லிக்கட்டு துவங்குவதற்க்கு முன்பாக ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழர்களுக்கும், தமிழச்சிகளுக்கும் ஊர்பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர். கொசவபட்டி ஜல்லிக்கட்டிற்க்காக பாதுகாப்பிற்க்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago