முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பியர் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

லண்டன்  - டிரம்ப் ‘விசா’ தடைக்கு 55 சதவீத ஐரோப்பியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

120 நாட்கள் தடை
அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா கண்டத்தின் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கிரிஸ், ஹங்கேரி, இத்தாலி. போலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பேரில் ஆன்லைனில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

55 சதவீதம் ஆதரவு
அதற்கு 55 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். போலந்தில் 71 சதவீதமும், ஜெர்மனியில் 53 சதவீதம், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் 41 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். ‘விசா’ தடையை இளைஞர்களை விட முதியவர்கள் ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில் அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்