முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் ‘ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு” பேரணி: கலெக்டர் கே.விவேகானந்தன், துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கி பின்னர் தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்டத்தில் தேசத்தந்தை அண்ணல் காந்தி அவர்களின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி உலக தொழுநோய் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி 30.01.2017 அன்று மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தொழுநோய் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மேலும் இருவார காலத்திற்கு நமது மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொழுநோய் விழிப்புணர்வு தீவிர பிரச்சார பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலங்கள், நலகல்வி பிரச்சார கூட்டங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, வினாடி வினா நிகழ்ச்சிகள், வீடுவீடாக சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு பணிகள் களப்பணியாளர்களுக்கான தொழுநோய் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளில் பள்ளி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆஷா களப்பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறையின் அனைத்து அலுவலர்களும் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறையின் மூலம் இரு வார விழாவின் ஒரு பகுதியாக  கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஊனமடைந்த நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 9 தொழுநோயாளிகளுக்கு சக்கர நாற்காளிகள், வாக்கிங் ஸ்டிக்குகள், போர்வைகள், கண்கண்ணாடிகள், ஆஊசு காலணிகள் வழங்கப்பட்டன. பின் ஸ்ரீ விஜய் வித்யாலயா நர்சிங்கல்லூரி மாணவ, மாணவிகள் 350 பேர் பங்கு பெறும் ‘ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது.தொழுநோயால் உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் பராமரிப்பு தொகை மாதம் ரூ. 1000-ம் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் 270 நபர்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் மூலம் போர்வைகள், கண்ணாடிகள், வாக்கிங் ஸ்டிக்குகள், இரண்டு ஜோடி ஆஊசு காலணிகள், மேலும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு பராமரிப்பு தொகை ரூ. 8000ஃ-ம் வழங்கப்படுகிறது. ‘சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறி” நோயாகும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள் என  கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இப்பேரணி கலெக்டர் வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை தேசிய தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. சுவாமிநாதன்,  மருத்துவ இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மரு. கு. நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. ஜெகதீஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள்       கார்திகேயன்,  இளவரசு, சிவக்குமார், ஆறுமுகம், மருத்துவர்கள் மரு. கனிமொழி, மரு. ராஜ்குமார் உட்பட சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்