முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாநகராட்சி தென்கீழ் அலங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்:கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாநகராட்சி தென்கீழ் அலங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   வழங்கினார்.பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி கலெக்டர் ஆ.அண்ணாதுரை, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள 2005 பள்ளிகளைச் சேர்ந்த 6,40,000 மாணவ மாணவியர்களுக்கும், 1749 அங்கன்வாடி மையத்தை சேர்ந்த 67813 குழந்தைகளுக்கும் என ஆக மொத்தம் 7,08,015 குழந்தைகளுக்கு  குடற்புழு நீக்க மாத்திரை இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.  இன்று மாநகராட்சி தென்கீழ் அலங்கம் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள அனைவருக்கும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.  200 மில்லி கிராம் அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் 1-2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 400 மில்லி கிராம் அல்லது 1 மாத்திரை அல்பெண்டசோல் 2-19 வயது குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.  அரசு பள்ளிகளில் 3,09,693 பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 87,681 பள்ளி மாணவியர்களுக்கும், தனியார் பள்ளியில் பயிலும் 2,42,828 மாணவ மாணவியர்களுக்கும்,  அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் 67,813க்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.  இந்த மாத்திரைகள் அனைத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.புழுத்தொற்றினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பிசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குடற்புழு பாதிப்பிலிருந்து குழந்தைகளை காக்க உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் மலம் கழித்த பின் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல், காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், சுகாதார கழிவறைகளை பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் போன்ற சுகாதார வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதால் குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்த சோகை தடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். மேலும் குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும்.இத்தகைய நன்மைகளை கொண்ட தேசிய குடற்புழு நீக்க நாளில் முழுமையான பயனை அனைத்து குழந்தைகளுக்கும் பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆ.அண்ணாதுரை,  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி,  சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் மு.வரதராஜ், மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்