முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,91,562 குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது:கலெக்டர் சு.கணேஷ் தகவல்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 6ந் தேதி முதல் 28ந் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் நமது மாவட்டத்திலுள்ள, 9 மாதம் முடிவடைந்த குழந்தை முதல் 15 வயதுடைய சிறார்கள் வரை, மொத்தம் 3,91,562 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.2015ம் ஆண்டில் உலகில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோயின் பாதிப்பினால் இறப்பதாகவும், இந்தியாவில் மட்டும் எழுபதாயிரம் குழந்தைகள் (உலக குழந்தைகள் இறப்பில் 50மூ) தட்டம்மை நோய்க்கு பலியாவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தட்டம்மை நோய், தடுப்பூசி மருந்தினால் தடுக்கப்படக் கூடிய நோய்களில் முதல் இடத்தில் உள்ளது. 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆஆசு தடுப்பூசி எனும், தட்டம்மை, பொண்ணுக்குவீங்கி, ரூபெல்லா நோய்களுக்குத் தனியார் துறைகளில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இத்தடுப்பூசியினால் இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தற்போது, தட்டம்மை, ரூபெல்லா ஆகிய இரு நோய்களுக்கான தடுப்பூசி தமிழக அரசின் மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிக்கு எதிராக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட 1573 பள்ளிகள் 1272 சத்துணவு முகாம்கள் அமைக்கப்பட்டு பிப்ரவரி 6 முதல் 28 வரை இம்முகாமில் 9 மாதம் முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 60000 குழந்தைகளுக்கும், தமிழகம் முழுவதும் 10 லட்சம் குழந்தைகளுக்கும் இதுவரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக விலைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசே இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது. சிலர் இதனால் திட்டமிட்ட வதந்திகளை பரப்புகின்றனர். இந்த தடுப்பூசி ஆனது முற்றிலும் பாதுகாப்பானது. பெற்றோர்கள் இந்த தடுப்பூசி குறித்து பீதி அடையவேண்டாம். இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியினை தவறாது போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும், அங்கன்வாடி பணியாளர்களும், பெற்றோர்களுக்கு இந்த தடுப்பூசி குறித்த ஆதாரமற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தடுப்பூசியின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கிட தக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை கலெக்டர் சு.கணேஷ், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்