முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமல்லவாடி கிராமத்தில் அம்மா திட்டம் சிறப்பு முகாம்:தாசில்தார் பன்னீர்செல்வம்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் சி.பன்னீர்செல்வம் வழங்கினார். திருவண்ணாமலை வட்டம் புதுமல்லவாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. முகாமிற்கு வந்த அனைவரையும்  மண்டல துணை தாசில்தார் திருநாவுக்கரசு வரவேற்க, சமூக பபாதுகாப்பு திட்ட தாசில்தார் கே.சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் புதிய குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் கோரியும், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கோரி மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 35 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் செய்யப்பட்ட குடும்ப அட்டை, 28 பயனாளிகளுக்கும், 7 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தாசில்தார் சி.பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.பாபு, சொரகொளத்தூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எல்.சிவராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் வி.பலராமன், பரணிதரன் மற்றும் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில்  கிராம நிர்வாக அலுவலர் ஏ.ஜீவிதா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago