முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணிக்கம்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி:பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் முக்கிய இடங்களில் புகைப்படக்கண்காட்சி நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கம்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் புகைப்படக்கண்காட்சி நேற்று (10.02.2017) அமைக்கப்பட்டது. இன்று அமைக்கப்பட்ட இப்புகைப்படக்கண்காட்சியில் மறைந்த முன்னால் தமிழக முதல்வர் அவர்கள் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக முக்கிய 5 கோப்புகளில் கையொப்பமிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சுதந்திர தின விழாவில் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மெட்ரோ ரயில் திட்டம், புதிய பேருந்து சேவையினை துவக்கி வைத்த நிகழச்சிகளின் புகைப்படங்கள், காவலர் குடியிருப்பு, பாலங்கள், ஆகியவற்றை திறந்து வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பாரதப்பிரதமர் அவர்கள் மறைந்த தமிழக முதல்வர் அவர்கள் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு வழங்கிய நிகழச்சிகளின் புகைப்படங்கள், மத்திய அமைச்சர்கள் மறைந்த தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்த நிகழச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களின் தொகுப்பு உள்ளிட்ட ஏராளமான புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இப்புகைப்படக்கண்காட்சியினை வாரசந்தைக்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மறைந்த தமிழக முதல்வர் அவர்கள் ஆறாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்றது உள்ளிட்ட மறைந்த தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளையும், வழங்கிய அரசு நலத்திட்ட உதவிகள் பற்றியும் இக்கண்காட்சியின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது என பெருமையுடன் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கி.மோகன்ராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) அ.க.ரமேஷ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்