முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள்:கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் "தேசிய குடற்புழு நீக்கும் தினம்" நமது மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.பின்னர் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :-தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ்நமது மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும் எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம். மதிய உணவு உண்டபின்பு அரை மணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் வழங்கப்படும் இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் வழங்கப்படவுள்ளன. 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை வழங்கப்படும்;, பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. சுவாமிநாதன், மருத்துவ இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மரு. கு. நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. ஜெகதீஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் கார்திகேயன், இளவரசு, சிவக்குமார், ஆறுமுகம், மருத்துவர்கள் மரு. கனிமொழி, மரு. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா உட்பட சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago