முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ.8 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் ஆய்வு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், க.பரமத்தி, புஞ்சைகாலக்குறிச்சி, நடந்தை இராஜபுரம் ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், ஆய்வு செய்தார்.

 

மராமத்து பணிகள்

 

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புஞ்சைகாலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூ.3,00,000 மதிப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மராமத்து பணிகளை மேற்கொண்டு நீர் செல்லும் வழித்தடங்களில் 1000 மீ புதிதாக குழாய்கள் அமைத்து 7;.5 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தி வெங்ககல்பட்டி, இலவனூர், புஞ்சைகாலக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடந்தை ஊராட்சி, ஆண்டிசெட்டிபாளையத்தில் ரூ.2.30 லட்சம் மதிப்பில் 5 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தி உண்டிபாளையம், வேட்டையார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், விஸ்வநாதபுரி அண்ணாநகரில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆழ் குழாய் கிணறு

 

கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் வறட்சி காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், புதிய மின்மோட்டார்கள் பொருத்துதல், மின்மோட்டார்களின் குதிரைத்திறனை அதிகப்படுத்துதல், குடிநீர் குழாய்கள் விரிவாக்கம் செய்தல், பழைய ஆழ்குழாய் கிணறுகள் தூர்வாரி புதுப்பித்தல் போன்ற புனரமைப்பு பணிகள் ரூ.8 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இவற்றில் சில பணிகள் முடிவுற்றும், சில பணிகள் நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குடிநீர் விநியோகம் குறித்து 1299 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உலகநாதன், தண்டபானி, உதவி பொறியாளர்கள் சரவணன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்