முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் நந்தகுமார் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      பெரம்பலூர்

தமிழ்நாடு தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 11.02.2017 இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார். துவைக்கி வைத்தார்.

 

வேலை வாய்ப்பு முகாம்

 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் உள்ள எம்.பி.எம் டெக்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட், மகேந்திரா கார் டீலர்சிப், ஐ.சி.ஐ.சி.ஐ அகாடமி, எம்.ஆர்.எப் லிமிடெட், பைன்பிட்;, கிளாசிக்போலோ, 108 ஆம்புலன்ஸ், ஏபிடி மாருதி, ஓம் விநாயகா, டீ எக்ஸ்போர்ட் உள்ளிட்ட 30 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற 825 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களில் 83 நபர்களுக்கு நேரடி பணி நியமண ஆணைகளும், 300 நபர்களுக்கு பயிற்சியுடன் கூடிய பணி நியமண ஆணைகளும், என மொத்தம் 383 நபர்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலமாக தேர்வாகியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இன்றே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட (மகளிர் திட்டம்) இயக்குநர் செல்வராசு, புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல், உதவி திட்ட அலுவலர்கள் துர்காசெல்வி, வெங்கடேசன், சங்கர் மற்றும் உதவி திட்ட மேலாளர்கள் (புதுவாழ்வுதிட்டம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்