முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது அரையாண்டிற்குண்டான தொழில் வரி மற்றும் நிறும வரியினை  மார்ச்  31க்குள் செலுத்த  வேண்டும் : சென்னை மாநகராட்சி

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      சென்னை

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய / மாநில / பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர் / பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழில் வரியினை வசூலிக்க சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி 1919 துணை விதி 138ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி 1919 துணை விதி 110ன் கீழ் நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிறும வரி மூலதனத்தை பொருத்து செலுத்திட வேண்டும்.2016-2017 நிதியாண்டிற்குண்டான இரண்டாம் அரையாண்டு தொழில்வரியினை பின்வரும் அட்டவணையின்படி செலுத்தப்பட வேண்டும்.
அரையாண்டிற்குண்டான தொழில் வரி மற்றும் நிறும வரியினை வரும் 31.03.2017-க்குள் செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதம் / வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மக்கள் நல பணிகளான சாலைவசதி, தெரு விளக்குகள், கழிவுகள் அகற்றுதல் போன்ற மகத்தான பணிகளை தொடர்ந்து செய்திட மாநகராட்சி வரிகளை உடனே செலுத்தி ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்