முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டைச்சேர்ந்த 9 மருத்துவமனைகளுக்கு ஏஎச்பிஐ எக்செலண்ஸ் விருதுகளை முதன்மைச் செயலர் டாக்டர். இராதாகிருஷ்ணன் வழங்கினார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

நோயாளிகளுக்கு சிரமமற்ற நேர்த்தியான சிகிச்சை மற்றும் சிறப்பான சிகிச்சை பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல பராமரிப்பு அமைப்புமுறையை நோக்கி இந்தியா நகர்வதற்கு தென்னிந்தியாவைச் சேர்ந்த முதன்மையான மருத்துவ நிபுணர்கள் சிலர் வலுவாக குரல் எழுப்பியுள்ளனர். இந்தியாவின் உடல்நல பராமரிப்பு வழங்குநர்களது சங்கத்தின் (AHPI) நான்காவது உலக மாநாட்டில் பேசுகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை முறையை, எதிர்காலத்திற்கான உடல்நல பராமரிப்பு மாதிரி என்ற அவர்கள் வர்ணித்தனர். அத்துடன் பொதுவான உடல்நல பராமரிப்பு வழங்கலுக்கான வரைவுத்திட்டத்தையும் வழங்கினர். தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் (சுகாதாரம்), டாக்டர். ஜே. இராதாகிருஷ்ணன் பேசுகையில், "தனியார்துறையில் துடிப்பான, திறன்மிக்க மருத்துவமனைகள் இருக்கின்றபோதிலும், தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையானது ஒவ்வொருநாளும் 6 இலட்சம் வெளிநோயாளிகள் மற்றும் 60,000 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை சேவையை வழங்கி வருகிறது. இந்த உயர்வான அளவானது, சுகாதார சேவை அமைப்பு எதிர்கொள்கின்ற சவால்களின் அளவீட்டை காட்டுகிறது. 1 இலட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களை பதிவுசெய்திருக்கின்றனர். உடல்நல சிகிச்சைக்கான அணுகுவசதி என்பது நோயாளியின் திருப்தி என்பது, இந்த சவாலானது இப்போது நகர்ந்திருக்கிறது. உடல்நல சிகிச்சை வழங்கலின் தரத்தை தீர்மானிப்பதில் நோயாளியை கையாள்வது என்பது ஒரு மிக முக்கிய தகுதி அம்சமாக மாறியிருக்கிறது. மனிதாபிமான அணுகுமுறை மற்றும் கனிவான சூழலை கொண்டிருக்கும் மருத்துவமனைகளையே நோயாளிகள் அதிகளவில் விரும்பி தேர்வுசெய்கின்றனர். தங்களது மனக்குறைகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு நோயாளிகளுக்கு சமூக ஊடகங்கள் சக்தியை வழங்கியிருக்கின்றன. மாநிலத்தின் சுகாதாரத்துறைக்கு, சிகிச்சை செலவை குறைப்பது மற்றும் முன்தடுப்பு சிகிச்சைப்பராமரிப்பு என்பதையே முன்னுரிமைப்பெறும் பகுதிகளாக இருக்க வேண்டும்," என்று கூறினார். ஏஎச்பிஐ- தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் ,ஏஎச்பிஐ-ன் தலைமை இயக்குநர் டாக்டர். கிரிதர் கியானி ஏஎச்பிஐ அவார்ட்ஸ் 2017 - ஐ தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மருத்துவமனைகள் வென்றிருக்கின்றன மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை மற்றும் கங்கா மருத்துவமனை கோயம்புத்தூர் இந்த இரு மருத்துவமனைகளும் மிகச்சிறந்த கற்பித்தல் மருத்துவமனைக்கான விருதை வென்றிருக்கின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago