முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் தேசிய கருத்தரங்கம்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறையின் சார்பாக 6வது தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி.பழனி முன்னிலை வகித்தார். இயந்திர பொறியியல் துறை தலைவர் டி.மோதிலால் வரவேற்றார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஹிந்துஜா பவுண்ட்ரிஸ் நிறுவன தரப் பொறியியல் மேலாளர் ஏ.காளிதாசன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் இயந்திர பொறியியல் துறை மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு தங்களை தகுதிபடுத்திக் கொள்ளும் விதமாக அவ்வப்போதைய துறை சார்ந்த அறிவை வளர்ப்பதோடு, தனித்திறமைகளை வளர்த்தால் எளிதில் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றார்.

மேலும் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் அளித்த 50 ஆய்வு கட்டுரைகளில் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு கட்டுரை மலரை ஹிந்துஜா பவுண்ட்ரிஸ் நிறுவன தரப் பொறியியல் மேலாளர் ஏ.காளிதாசன், டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வெளியிட்டனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் தயாரித்த கைகள் இல்லாத மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையிலான கார், பல்நோக்கு இயந்திரம், ரைனோ பைக் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படைப்புகள் அடங்கிய கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து நான்கு சக்கர, இரு சக்கர நவீன வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை டி.ஜெ.எஸ் கல்வி குழும இயந்திர பொறியியல் துறை தலைவர் மோதிலால், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான உதவி பேராசிரியர்கள் ஆர்.சதீஷ்குமார், எஸ.சத்யமூர்த்தி மற்றும் இயந்திர பொறியியல் துறை மாணவர் அமைப்பினர் முன்னின்று நடத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்