முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரகப் பகுதிகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் பணிகள் தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி .  தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

              இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், 2016-17 ஆம் ஆண்டிற்கு 31.03.2017- க்குள் 35 ஊராட்சிகள் திறந்த வெளி மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிப்பு செய்யப்படவுள்ளது . இக்கூட்டத்தில் 15.02.2017-க்குள் வட்டாரத்திற்கு ஒரு ஊராட்சி வீதம் 13 ஊராட்சிகளை திறந்த வெளி மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிப்பு செய்ய துரிதமாக செயல்படவும் மீதமுள்ள 22 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டும் பணியினை முடிக்கவும், அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக்கழிப்பறை முழுமையாக கட்டி முடித்து வட்டாரத்தினை திறந்த வெளி மலம் கழித்தலற்ற வட்டாரமாக மாற்றவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அவர்களால்  அறிவுரைகள் வழங்கப்பட்டன.

               இக்கூட்டத்தில், இணை இயக்குநர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் குருநாதன், செயற்பொறியாளர் (பொ) , உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்