முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 ஆலோசனை கூட்டம்

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் தெரிவிக்கையில் “கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து 100 வார்டுகளிலும் டெங்கு தொடர்பான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார அலுவலர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுவதும், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுகல், பூங்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டும் மற்றும் டெங்கு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொண்டும் வருகிறார்கள். மேலும், மாநகராட்சி புகை வண்டி வாகனங்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளுக்கு சென்று புகை மருந்தும் அடித்து வருகிறார்கள்.

மேலும், குறிப்பாக பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியும், வீடுகளில் உள்ள பிரிஜ், அழகுக்காக வளர்க்கப்படும் செடிகள் வைக்கப்படும் பூந்தொட்டிகள், மணிபிளேண்ட் ஆகியவற்றில் உள்ள தண்ணீரினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவற்றை வாரம் ஒருமுறை தூய்மை செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டும், வீடு மாடியிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் (ஆயளள ஊடநயniபெ) சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு செல்லும் னுடீஊ பணியாளர்கள் பணிக்கு செல்வதற்கு முன்பு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய முறைகுறித்து உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொசு மருந்து ஊற்ற வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். வீட்டைச் சுற்றியும், மாடியிலும் தேவையற்ற பொருட்களை போட வேண்டாம், தண்ணீரை காற்றுப் புகாத வண்ணம் மூடி வைக்கவும் அல்லது துணிகளைக் கொண்டு கட்டி வைக்கவேண்டும். மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எம்.சந்தோஷ்குமார், அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்