முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஆண்டுவிழா

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டி புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஆண்டு விழா நேற்று தொடங்கியது.

அதனையொட்டி தேவாலயத்தில் பரிசுத்த தேவமாதா, புனித சூசையப்பர், புனித செபஸ்தியார் திருவிழாவும் ஆலயத்தின் ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்கு தந்தை சோனி வடயாரம்பில் கொடியை மந்திரித்து ஏற்றி வைத்தார். குன்னூர் செபஸ்டியான் ஆலய பங்கு தந்கை ஜிஜோ வாத்தேலில் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். வரும் 19_ந் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை திவ்விய நற்கருணை ஆராதனை, இறை இரக்க ஜெபமாலை, ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு நவநாள் நடைபெறும்.

இந்த விழாவில் மானந்த வாடி ஆயர் இல்ல குரு ஜினோஜ் பாலதடத்தில், இடிவண்ண புனித தாமஸ் ஆலய பங்கு தந்தை செபாஸ்டியன் பாறையில், மானந்தவாடி மத போதன மைய இயக்குநர் ரோய் வட்டக்காடு மற்றும் புனித மரியன்னை ஆலய பங்கு தந்தை வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். விழாவின் இறுதி நாளைன வரும் 19_ந் தேதி பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் வாத்திய மேளம், வானவேடிக்கை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago