முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகா சிவராத்திரி திருவிழா பிப்,17-இல் கொடியேற்றத்துடன் துவக்கம்.

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   .ராமேசுவரம்,பிப்,12: ராமேசுவரம்   ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும்  நடைபெறும் மாசிமகா சிவராத்திரி திருவிழா இம்மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்படவுள்ளது.

   இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகா சிவராத்திரி திருவிழா இம்மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில்  ராமநாதசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இதனை  தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழச்சியான பிப்ரவரி 24 ஆம் தேதி மகாசிவராத்திரியையொட்டி அன்று இரவு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், வெள்ளிரதத்தில் புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், பிப்ரவரி 25 ஆம் தேதி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சியும்,பிப்ரவரி 26 ஆம் தேதி  ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி அக்னிதீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.மேலும் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாட்களிலும் இரவு திருக்கோயிலின் நந்தவனக்கலையரங்கில் ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்களும் மற்றும் சுவாமி,அம்மன் அலங்காரத்தில் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் புறப்பாடகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என இணை ஆணையர் செல்வராஜ் ஞாயிற்றுக்கு கிழமை தெரிவித்தார்.              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்