முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழி தவறி இந்தியா வந்த சீன ராணுவ வீரர் 50 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போரின்போது வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கடந்த 50 ஆண்டுகளாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த சீன ராணுவ வீரர் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

ராணுவ சிறையில் அடைப்பு :

சீனாவின் சாங்ஸி மாகாணத்தில் உள்ள யூ னாய் நன் கன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் வாங் கி (77). இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போரில் வாங் கியும் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த வாங் கி கைது செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1969-ல் சிறையில் இருந்து விடுதலையானதும் சீனாவுக்கு திரும்ப முடியாமல் மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் உள்ள திரோடி கிராமத்திலேயே தங்கி விட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் குடியிருப்பு :

மேலும் இந்தியரான சுசீலா என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு விஷ்ணு வங் (35) என்ற மகனும், நேகா என்ற மருமகளும் உள்ளனர். தவிர கனக் வங் என்ற பேத்தியும் உள்ளார். தனது குடும்பம் பெரிதானதால் சீனாவுக்கு செல்லும் முயற்சியை விஷ்ணுவங் அடியோடு கைவிட்டார்.
பி.பி.சி ஒளிபரப்பியது:
இந்தச் சூழலில் அவரது வாழ்க்கை பற்றிய நிகழ்ச்சியை பிபிசி தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது.. அந்த நிகழ்ச்சி சீனாவின் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியதால் வாங் கியை திரும்ப அழைத்துக் கொள்ள சீனா நடவடிக்கை எடுத்தது. ஐ.நா.வில் ஜெயிஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும், அணு விநியோக குழுவில் உறுப்பினர் பதவி என இந்தியா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு சீனா முட்டுகட்டை போட்டு வருகிறது. இதனால் இந்தியா, சீனா உறவில் சமூகமற்ற நிலை காணப்படுகிறது.

சீனா திரும்பினார் :

எனினும் 50 ஆண்டுகளாக பிரிந்த தனது குடும்பத்தினருடன் வாங் கி இணைய வேண்டும் என்பதற்காக சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளித்தது. அதன் காரணமாக தனது இந்திய குடும்பத்தினருடன் வாங் கி அண்மையில் சீனா சென்றடைந்து அங்குள்ள குடும்பத்தினருடன் இணைந்தார். வாங் கி அவரது குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு மிகுந்த உருக்கமாக இருந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தியஅரசுஅனுமதி :

வாங் கி குடும்பத்தினருடன் சீனா சென்றுவிட்ட போதிலும் அவர் விரும்பினால் மீண்டும் இந்தியாவில் குடியேறலாம் என மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago