விக்ரம்பிரபு - நிக்கிகல்ராணி நடிக்கும் “பக்கா“

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      சினிமா
cinima-4

Source: provided

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா“

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு - சரவணன்இசை - C.சத்யா  பாடல்கள் - யுகபாரதிகலை - கதிர்நடனம் - தினேஷ்ஸ்டன்ட் - மிராக்கிள் மைகேல் எடிட்டிங் - சசி தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார் தயாரிப்பு - T.சிவகுமார்கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S.S.சூர்யா மக்கள் தொடர்பு -மௌனம் ரவி படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.

நான் இயக்குனர் பேரரசுவுடம் உதவியாளராக பணியாற்றினேன். பக்கா படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் இது பக்கா கமர்ஷியல், ஜாலியான படம். கிராமத்துக் கதையான இது, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கலகலப்பான காமெடி இருக்கும். படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ம் தேதி தென்காசியில் துவங்குகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: