‘மொட்டசிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      சினிமா
cinima-5

Source: provided

ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, ராய்லட்சுமி, கோவை சரளா, சதீஷ், மனோபாலா, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்திருக்கும் படம் ‘மொட்டசிவா கெட்ட சிவா’. சாய்ரமணி இயக்கியுள்ள இந்த படத்துக்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார்.

ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் மதன், சிவபாலன் ஆகியோர் வெளியிடும் இது வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல் முறையாக இந்த படத்தின் இசை சிடியை விவசாயிகள் வெளியிட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அதற்கு அனுமதி வழங்கிய தயாரிப்பாருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. இந்த படம் கடந்த ஜுன் மாதமே வெளியாகி இருக்க வேண்டும். தற்போது பல சிக்கல்களையும், தடைகளையும் கடந்து வந்திருக்கிறது. படம் வெளியாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ‘மொட்டசிவா கெட்டசிவா’ அனைவரும் விரும்பி ரசிக்கும் கமர்சியல் படமாக உருவாகி இருக்கிறது.


நிச்சயம் எல்லோருக்கும் இது பிடிக்கும்”என்றார்.தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, “‘மொட்டசிவா கெட்ட சிவா’ எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 88-வது படம். 89-வது படம் ‘கடம்பன்’, 90-வது தயாரிப்பு தெலுங்கு படம். மற்ற 2 படங்களும் தயாராகி விட்டன. அதற்கு முன்பு இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

ஒரு சாதனைக்காக 1000 படங்கள் தயாரிக்கும் வரை நான் தயாரிப்பாளராக நிர்வாகம் செய்வேன் பின்னர் ஓய்வு பெறுவேன்” என்றார். நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: