முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் சி.கதிரவன் வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக 10.02.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி இன்று முதல் (12.02.2017;) அணையிலிருந்து பாசனத்திற்காக 85 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கரும் ஆக மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன. இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள 22 கிராமங்கள் பயன்பெறும்.அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 85 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் (வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு -26க.அடிஃவினாடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு - 62க.அடிஃவினாடி) ஆக மொத்தம் 88 கன அடி ஃ வினாடி வீதம் திறந்து விடப்படும். நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு பின் எக்காரணம் கொண்டும் பாசனத்திற்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்கப்படமாட்டாது. விவசாயிகள் நீர் பங்கீட்டில் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெற வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது ஓசூர் சார் ஆட்சியர் மரு.கே.செந்தில் ராஜ் இ.ஆ.ப. பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் (நீர்வள ஆதாரம்) பாலசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் (பொ) சாம்ராஜ், உதவி பொறியாளர்கள் பொன்வளவன், பார்தீபன், வேளாண்மைத் துணை இணை இயக்குநர் சங்கரன், உதவி வேளாண் அலுவலர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் மற்றும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.டி.ஜெயராமன், ஹாரிஷ்ரெட்டி, முனிராமப்பா, ராஜப்பா, நாராயணன், அசோக்ரெட்டி, சீனியப்பா, ஜமீர்பாய், மற்றும் ஆயக்கட்டு பாசன தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்