முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங். ஆட்சியில் வளர்ச்சி ஏற்படவில்லை: பிரதமர் மோடி பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

ஷீநகர்(உத்தரகாண்ட்) : உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. வளர்ச்சி அடையச்செய்யும் எண்ணம் எதுவும் அந்த கட்சிக்கு  இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு வரும் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டார். மாநிலத்தில் உள்ள ஷிநகர் மைதானத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா பிரசார கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் , மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் மேலும் கூறியதாவது:-

வளர்ச்சி இல்லை:

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் சத்தீஷ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது. அதனால் அந்த மாநிலங்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அன்னிய முதலீடும் அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அதனால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. மாநிலத்தில் இயற்கை மூலிகைகளும் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சாதகமான இயற்கை அமைப்பும் உள்ளது. அப்படி இருந்தும் அதை காங்கிரஸ் ஆட்சி பயன்படுத்தி மாநிலத்தை வளர்ச்சி அடையச்செய்யவில்லை. இதற்கு காரணம் காங்கிரசின் மோசமான ஆட்சிதான் காரணம். வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் காங்கிரஸ் அரசிடம் இல்லை. அதனால் வரும் தேர்தலில் காங்கிரஸை மக்கள் தோற்கடிப்பதோடு பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அப்போதுதான் உத்தரகாண்ட் மாநிலம் வளர்ச்சி அடையும். இவ்வாறு மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்