முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

56வது மலர்கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்--கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா  மலர்கண்காட்சிக்கு தயாராகி வருகின்றது.

கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் அதுவும் பெண்கள் குழந்தைகளை கவரும் இடங்களில் பிரையண்ட் பூங்கா முதன்மையனது. பிரையண்ட் என்ற  ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இந்த பூங்கா அவரது பெயரிலேயே தற்போது அழைக்கப்படுகின்றது. கொடைக்கானலில் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களில் குளு,குளு சீசன் காலமாகும் இந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளை கவர சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இந்த கோடை விழாவில் முக்கிய நிகழ்வாக இரண்டு நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி விழா அமைகின்றது.

வரும் மே மாதம் நடைபெறும் 56 வது மலர்கண்காட்சிக்கு தற்போதே கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா தயாராகி வருகின்றது. தற்போது தயாரானால் தான் வரும் ஏப்ரல் மே இரண்டு மாதங்களிலும் பூங்கா சற்றேரக்குறைய 2 லட்சம் மலர்களால் நிறம்பி இருக்கும்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய ரோஜா மலர் பாத்திகள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. கிளங்கு வகை பூச்செடிகளான கேனாஸ், கோல்டன் லில்லி, ரெட்ஹார்ட் போக்கர், போன்ற மலர்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகின்றது.

பத்து வகையான மலர் செடிகளான டெல்பீனியா, பின்க் ஆஸ்டர், ஆர்னத்திகேலம், அஸ்டமேரியா, பேன்சி, ஜினியா, ஹெலிகிரைசம், பென்டஸ்மென்ட், உள்ளிட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றது இம் மலர்கள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பூத்து குளுங்கத் துவங்கி விடும். அதற்கு ஏற்றார் போல் தற்போது இப் பணி செய்யப்பட்டு வருகின்றது.

வீரிய ஒட்டு ரக டேலியா செடிகள் மற்றும் ஒட்டு ரக பூ விதைகள் கல்கத்தா, மற்றும் ஊட்டியிலிருந்து கொண்டுவந்து நடவு செய்யப்பட உள்ளது. கல்கத்தாவிலிருந்து டேலியா, கிளாடி, ஆகியவையும் ஊட்டியிலிருந்து மேரிகோம்ஸ், பேன்சி, ஆண்டிரைனம், கேலண்டுலா, டயான்தஸ், ஆஸ்டர், பிளாக்ஸ் உள்ளிட்ட 1லட்சம் உயர்ரக நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த மலர் செடிகள் தவிற பூங்காவில் ஏற்கனவே உள்ள ரோஜா மலர் செடிகள் கவாத்து எடுக்கப்பட்டு வருகின்றது. கவாத்து எடுத்த பின் இந்த ரோஜா செடிகள் அதிகம் பூக்களை தரும். இவை தவிற கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டு தோறும் பூக்கக் கூடிய மெக்னோலியா கிளாண்டிபிளோரா என்ற பிங்க்வெள்ளை நிற மணம் வீசக் கூடிய மலர்களும் பூத்துள்ளது.

பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பில்பெர்ஜியா, ஆர்கிட்ஸ், எபிடன்ரம், உள்ளிட்ட அரிய பூக்கள் தற்போது பார்ப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு வருகின்றது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வரும் கோடை விழாவிற்கு தயாராகிவருகின்றது. இந்த நடவுப் பணிகள் கடந்த மாதம் முதல் கட்டமாகவும், தற்போது இரண்டாம் கட்டமாகவும், அடுத்த மாதம் மூன்றாம் கட்டமாகவும் நடவு செய்யப்படும். இத் தகவலை தோட்டக்கலை அதிகாரி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்