முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 70 சட்டசபை தொகுதிகளில் ஒரே கட்ட தேர்தல் : 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று முடிகிறது

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரகாண்ட் மாநிலத்தில்  70 சட்டசபை தொகுதிகளில்   வரும் 15 ம் தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று முடிகிறது.

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்  பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற 15-ம் தேதி 70 சட்டசபைதொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  இதற்கான தேர்தல் பிரசாரமும் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

2-வது கட்ட தேர்தல்:

இந்தநிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள  73 தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றது. தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தநிலையில் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தை சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டனர். இரண்டாவது கட்டமாக 11 மாவட்டங்களில் 67 தொகுதிகளுக்கு வருகின்ற 15-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தலைவர் அமீத் ஷா மற்றும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமாஜ்வாடி கூட்டணி:

சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் இரு கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். முலாயம்சிங் யாதவுக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் சமாஜ்வாடி கட்சி சார்பாக இதுவரை முலாயம் சிங் யாதவ் பிரசாரம் செய்யவில்லை.

பகுஜன்சமாஜ்:

பகுஜன்சமாஜ் கட்சிக்கு அதன் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மிஸ்ரா ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த கட்சிக்கு டெல்லி இமாம் ஆதரவு அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது சமாஜ்வாடியையும் காங்கிரசையும் கடுமையாக தாக்கி பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எதிராக செயல்பட்டு வந்தனர். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரே இரவில் இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி வைத்துக்கொண்டனர்  என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 11 மாவட்டங்களில் 67 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த 67 தொகுதிகளும் சஹரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பால், ராம்பூர், பேரேலி, அம்ரோஹா,பிலிபத், ஹெரி, ஷாஜகான்பூர், பதோவா ஆகிய மாவட்டங்களில்  உள்ளன. இங்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்