முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மாநிலத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

குல்காம் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர்.  துப்பாக்கி சண்டையில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதால் கலவரம் வெடித்தது.

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் குல்காம் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பிரிசல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்தினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நமது ராணுவ  வீரர்கள் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

சுட்டுக்கொலை:

ராணுவ வீரர்கள் வருவதை பார்த்து தீவிரவாதிகள் அந்த வீட்டிற்குள் இருந்தபடியே வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இப்படி பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர். இருதரப்பினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டார்.

கல்வீச்சு:

சிவிலியன் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போதும் அந்த வன்முறை கும்பல் தொடர்ந்து பாதுகாப்புபடையினர்களை நோக்கி கல்வீசிக்கொண்டிருந்ததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 15 பேர் அனந்தனாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் குல்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்