நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

 

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. திருச்செந்தூர் தாசில்தார் செந்தூர்ராஜா தலைமைவகித்து தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்;. பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை தவமணி தேவி வரவேற்றார். 270மாணவிகளுக்கு தமிழகஅரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கப்பட்டன.நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி தேசிகன் மற்றும் ஆசிரியைகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜூலியட் ஜெயசீலி நன்றி கூறினார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: