முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணிகள் : கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான நிவாரண கணக்கெடுப்பிற்காக பதராக விளைந்தவைகளை அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் சித்தலவாய், சங்கரன் மலைப்பட்டி கிராமத்தில் ராமசாமி, தஃபெ முத்து என்பவரது நெற்பயிர் விளை நிலங்களில் அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

கரூர் மாவட்டத்தில் நெற்பயிர் சாகுபடி, உளுந்து, மஞ்சள், துவரை, கரும்பு, கொள்ளு, நிலக்கடலை, ஆமணக்கு என அனைத்து பயிர் சாகுபடிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநல குழுக்கள் மற்றும் மத்திய குழுக்கள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், நெற்பயிர் சேத மதிப்பீட்டிற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்து நெற்பயிர்களையும் அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்துறை இணை இயக்குநர் அல்தாப், துணை இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், உதவி இயக்குநர் ராஜ்குமார், வேளாண் அலுவலர் மணிமேகலை, ஆய்வாளர் பாண்டியன், வட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்