முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியக்கரையில் சூறை மீன்கள் சீசன் கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாவதால் மீனவர்கள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் சூறை மீன்கள் அதிகமாக கிடைத்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

 

கோடியக்கரையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இவர்களுடன் உள்ளுர் மீனவர்களும் சேர்ந்து மீன் பிடிக்கின்றனர் 250க்கும் மேற்பட்ட படகுகளில் நாள் தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்

இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 படகுகளில்; குறைந்தபட்சமாக 5 டன்கள் வரைசூறை மீன்கள கிடைத்து வருகின்றன இதன் மூலம் ஒரு படகிற்கு ரூ 15 ஆயிரம் வரை வருமானம் மீனவர்களுக்கு கிடைக்கிறது இந்த மீன்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் ஐஸ் கட்;டிகள் கலந்து பேக்கிங் செய்து வேன்களில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்புகின்றனர்.

 

அங்குள்ள மக்கள் இந்த மீன்களை அதிகமாக விரும்பி சாப்பிடுவதால் சூறை மீன்கள் கிலோ ரூ 140க்கு விற்பனையாகிறது இந்த மீனுக்கு சற்று கூடுதலாக விலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்