முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் பா.ம.க சார்பில் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

 

காஞ்சிபுரம் மேற்கு, தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் பொன்,கங்காதரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன், மாவட்ட தலைவர்கள் சேஷாதிரி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சக்திகமலாம்மாள், மாநில துணைப் பொது செயலாளர் திருக்ச்சூர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் காஞ்சி நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்