முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களக்காட்டூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியத்திற்குட்பட்ட களக்காட்டூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் வாலாஜாபாத் வாட்டாட்சியர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரவரதன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 67 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 37 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 30 மனுக்கள் நிலுவை உள்ளது, நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் பாலசுந்தரம், செல்விதேவேந்திரன் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ராஜி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்