முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணா புதிய கட்சி தொடக்கம்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கையில், விடுதலைப் புலிகன் அமைப்பின் முன்னாள் தளபதியாகவும், ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்தவருமான கருணா புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

விடுதலை புலி
இலங்கையில் இயங்கி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு பிராந்திய தளபதியாக செயல்பட்ட கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக 2009-ம் ஆண்டில் வெளியேறினார். பின்னர், அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். மேலும், அமைச்சர் சபையிலும் இணை அமைச்சர்யாக பணியாற்றினார்.

புதிய கட்சி
கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததும், கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்த கருணா, புதிதாக பொறுப்பேற்ற சிறிசேனா அரசால் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில், கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து கருணா, புதிதாக ‘ஐக்கிய தமிழர் சுதந்திரக் கட்சி’ என்ற அரசியல் கட்சியை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளார்.

அலுவலகங்கள் திறப்பு
பட்டிகோலா என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக கட்சி தொடங்கியுள்ள கருணா, தமிழர்கள் வசிக்கும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தனது கட்சியின் அலுவலகங்களை திறந்துள்ளார். மேலும், தனது கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திலும் விண்ணப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்