முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை மீறி மீண்டும் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பியோங்கன்  - தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்ப்பை மீறி
பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம்  தகவல் தெரிவித்தது.

ஏவுகணை சோதனை
வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணையை நேற்று முன்தினம் காலை 7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் எச்சரிக்கை
இந்நிலையில், தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை வடகொரியா நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். இதனிடையே, ஜப்பானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை சோதனை வெற்றி
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5-வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்த நிலையில் தடையை மீறி நேற்று முன்தினம் மீண்டும் வட கொரிய ஏவுகணை சோதனை நடத்தியது. வான் வெளியில் நடுத்தர தூரம் அதாவது 550 கி.மீ தூரம் (350 மைல்) பாய்ந்து சென்று தாக்கும் ‘புக்குக் சாங்-2’ என்ற ஏவுகணையை பரி சோதனை நடைபெற்றது. இத்தகவலை தென் கொரியா அறிவித்தது. ஆனால் வட  கொரியா இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் சாதித்தது. இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங்-யங் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடந்தது தெரிய வந்துள்ளது.மேலும் இச்சோதனை வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்