முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு: மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் மக்கள் போரட்டம்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

மெக்சிகோ சிட்டி  - எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள்.

எல்லையில் சுவர்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து குடியேறுபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதை நடை முறைப்படுத்த அதிவிரைவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எல்லையின் சில பகுதிகளில் தற்காலிகசுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று 1300 கி.மீட்டர் நீளத்துக்கு நிரந்தர சுவர் கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு
அதற்கு மெக்சிகோவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எல்லையில் சுவர் கட்டும் டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல நகர வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மெக்சிகோ அதிபர் என்ரிகோ பெனா நியட்டோவுக்கு எதிரான பேனர்களையும், வைத்திருந்தனர். டிரம்பின் குடியுரிமை கொள்கை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மெக்சிகோ மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்