முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை: ஆளுநருக்கு வெங்கையா நாயுடு ஆதரவு

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்து உள்ளார்.

கடும் போட்டி
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இவர்கள் இருவரும், கடந்த 9-ந் தேதி தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவை தனித்தனியாக சந்தித்தனர். அப்போது, ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அதேபோல, எம்.எல்.ஏக்கள் அனைவரும் முதல்வராக தன்னை தேர்வு செய்துள்ளதால், பதவி ஏற்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா முறையிட்டார்.

கவர்னர் தாமதம்
ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்காமல் உள்ளார். இறுதி முடிவு எடுப்பதில் கவர்னர் செய்யும் காலதாமதத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்த்தும், ஆதரித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கையா ஆதரவு
இவ்விவகாரத்தில் பாரதீய ஜனதா ஆளுநருக்கு ஆதரவாக உள்ளது. சுப்பிரமணிய சாமியின் கருத்தானது பாரதீய ஜனதாவுடையது கிடையாது என தெரிவித்து விட்டது. இவ்விவகாரத்தில் இப்போது ஆளுநருக்கு ஆதரவு கரம் நீட்டிஉள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை, கவர்னர் அவருடைய பதவியை செய்கிறார் என குறிப்பிட்டு உள்ளார்.

பதவி காலி இல்லை
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, “தமிழகத்தில் முதல்வர் பதவியை நிரப்ப வேண்டியது இல்லை, முதல்வர் பதவியானது காலியாக இல்லை. ஏற்கனவே முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.” என்று கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago