முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் மேலும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் மம்தா அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா  - மேற்கு வங்காளம் மாநிலத்தில் மேலும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

புதிய மாவட்டங்கள்
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆட்சியை பரிபாலனம் செய்ய வசதியாக தற்போதைய நிலவரப்படி மொத்தம் 20 மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் தலைமையில் அரசுப்பணிகள் நிறைவேற்றப்படுகின்றது. இந்நிலையில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டும், ஆட்சிமுறை வசதிக்காகவும் மேலும் 3 புதிய மாவட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

கலிம்பாங் மாவட்டம்
மாநிலத்தின் வடபகுதியில் டார்ஜீலிங் மாவட்டத்தை பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கலிம்பாங் மாவட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் மம்தா, புலிகளின் சரணாலயமாக திகழும் சுந்தர்பன் காடுகளை உள்ளடக்கி சுந்தர்பன் மாவட்டமும், பர்த்வான் மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து, அசான்சால் மற்றும் ஜார்கிராம் என்னும் இரு புதிய மாவட்டங்களும் விரைவில் உருவாக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago