முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரம் ஓய்ந்தது: 70 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

டேராடூன்  - உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளைக்கொண்ட சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதேநேரத்தில் உத்தரப்பரதேச மாநிலத்திலும் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

5 மாநில தேர்தல்:
பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 117  தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கும் கோவாவில் 40 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கும் தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் இடைபெற்றது. அதனையடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. முதல்கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தநிலையில் இரண்டாவது கட்ட தேர்தல் 6 7 தொகுதிகளுக்கு நாளை நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசும்-சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி வைத்துள்ளன.

பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. பகுஜன்சமாஜ் கட்சியும் தனியாகத்தான் போட்டியிடுகிறது. பகுஜனசாம்ஜ் கட்சிக்கு டெல்லி இமாம் ஆதரவு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்த 73 தொகுதிகளிலும் நாளை இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கும் 67 தொகுதிகளிலும் ஜாட் இன மக்கள் அதிகம். இந்த இரண்டு கட்ட தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தலைவர் அமீத் ஷா மற்றும் கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பதட்டம் உள்ள தொகுதிகள் மற்றும் கலவரம் ஏற்படக்கூடிய வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகள் சார்பாக ராகுல் காந்தி, முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனால் இதுவரை சமாஜ்வாடிக்கு ஆதரவாக முலாயாம் சிங் பிரசாரம் செய்யவில்லை. தன் மகன் அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதான் காரணமாகும். பகுஜன்சமாஜ் கட்சிக்கு முன்னாள் முதல்வர் மாயாவதியும் அந்த கட்சியின் மூத்த தலைவர் சர்மாவும் தீவிர பிரசாரம் செய்தனர். இரண்டாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்துவிட்டதால் 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்