முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 860 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தின் போது பணியிடையில் காலமான பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், மேலத்தாங்கல் ஊராட்சி செயலர் ப.கன்னியப்பன் மனைவி க.விஜயலட்சுமி, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சுப்ரமணியன் மகன் சு.நரேஷ், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், பணிப்பார்வையாளர் தா.ராமகிருஷ்ணன் மகன் ரா.பிரசன்னா ஆகிய மூன்று நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வழங்கினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்